தான்தோன்றிமலை கோவில் நெரிசலால் பக்தர்கள் அவதி
ADDED :3319 days ago
தான்தோன்றிமலை: தான்தோன்றிமலை வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளிலும், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டு சென்றனர். வாரந்தோறும் சனி அன்று, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடினர். சிலர் நேர்த்திக்கடனாக தனியாகவும், குடும்பத்தினருடனும் முடி காணிக்கை செலுத்தினர். ஆனால், 10 ரூபாய் டிக்கெட் கொடுக்கப்பட்டு முடி காணிக்கை செலுத்துபவரிடம், 60 ரூபாய் வசூலித்ததால் பக்தர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். குளிப்பதற்கு தண்ணீர் வசதியும் இல்லை.