பவானி கோவில்களில் ஒரே நேரத்தில் வழிபாடு
ADDED :3319 days ago
பவானி: பவானி தொகுதிக்கு உட்பட்ட, பல்வேறு அம்மன் கோவிலில், நேற்று ஒரே நேரத்தில், 1,008 தீபங்கள் ஏற்றி, முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெறவேண்டி, அ.தி.மு.க.,வினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பவானி செல்லியாண்டியம்மன் கோவில், வேதநாயகி அம்மன், சமயபுரம் மாரியம்மன், எல்லை மாரியம்மன், குருப்பநாயக்கன்பாளையம் மஹா மாரியம்மன் உட்பட பல்வேறு கோவில்களில் கட்சி நிர்வாகிகள், 1,008 அகல் விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதில் அமைச்சர் கருப்பணன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.