உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூளகிரி, கெலமங்கலத்தில் வால்மீகி ஜெயந்தி விழா

சூளகிரி, கெலமங்கலத்தில் வால்மீகி ஜெயந்தி விழா

ஓசூர்: சூளகிரி மற்றும் கெலமங்கலம் பகுதியில், வால்மீகி ஜெயந்தி விழா நடந்தது. தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அடுத்த ஏ.கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள வால்மீகி கோவிலில், ஜெயந்தி விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி அதிகாலை, 5:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிதிரெட்டி பஞ்., தலைவர் கிருஷ்ணப்பா, பேவநத்தம் பஞ்., தலைவர் பத்மா மாதேஸ், வால்மீகி சங்க செயலாளர் நாராயணசுவாமி உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், புன்னாகரம், ஆள்சாதனப்பள்ளி, சூளகிரி உட்பட பல்வேறு பகுதிகளில், வால்மீகி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !