உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய புதுச்சேரி கோவில்களில் விளக்கு பூஜை

தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய புதுச்சேரி கோவில்களில் விளக்கு பூஜை

புதுச்சேரி: தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி புதுச்சேரியில் பல்வேறு கோவில்களில், அ.தி.மு.க., வினர் விளக்கு பூஜை நடத்தினர். உப்பளம் தொகுதி புஸ்சி வீதியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில் விளக்கு பூஜை நடந்தது. அவைத் தலைவர் பாண்டுரங்கன், நகர செயலாளர் ரவீந்திரன் கலந்து கொண்டனர்.

முதலியார்பேட்டை: முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம் நாகம்மாள் கோவிலில், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமையில் விளக்கு பூஜை நடந்தது. மாநில துணை செயலாளர் பன்னீர்செல்வி, செயலாளர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முத்தியால்பேட்டை: முத்தியால்பேட்டை தொகுதி சார்பில் வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., தலைமையில், கட்சியினர் காந்தி வீதி செல்வ விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். பாசறை செயலாளர் செந்தில்குமரன், பழனிவேல், ராஜாங்கம், கண்ணன் கலந்து கொண்டனர்.

நெல்லித்தோப்பு: நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் தலைமையில் பிள்ளைத்தோட்டம் ஆனந்த முத்துமாரியம்மன் கோவிலில், தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. கோகுலகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ., பரசுராமன், முருகதாஸ், லட்சுமணன் கலந்து கொண்டனர்.

பாகூர்: கன்னிக்கோவில் மன்னாதீஸ்வரர் பச்சைவாழியம்மன் கோவிலில் பாகூர் தொகுதி அ.தி.மு.க பிரமுகர் வேல்முருகன் தலைமையில், தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. முன்னாள் அமைச்சர் வெங்கடசாமி, மீனவரணி நாகராஜ், ராஜாராமன் கலந்து கொண்டனர்.

கண்டமங்கலம்: கண்டமங்கலம் திருமங்கலம் கிராமத்தில் அ.தி.மு.க., கிளை சார்பில், ஆராமுகப் பெருமாள் கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. கிளை செயலாளர் கோவிந்தராஜன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் பொன் துரைக்கண்ணு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !