உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி சிறப்பு தொழுகை

மழை வேண்டி சிறப்பு தொழுகை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் புலவரப்பா சந்தை திடலில் மழை வேண்டி ஆர்.எஸ்.மங்கலம் முஸ்லிம் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. முன்னதாக ஜிம்மா பள்ளியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தலைமை இமாம் முகமதுஆலிம் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினார். மதார்ஷா பொறுப்பாளர் சேக்முகைதீன் துஆ செய்தார். ஜாமத் தலைவர் பசீர்அஹமது, ஜமாத் செயலாளர் சீனிமுகமது, சேவைக்குழு தலைவர் நிகுமத்துல்லா, துணைத் தலைவர் முஹமது தமீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !