உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

முதல்வர் ஜெ., நலம் பெற வேண்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

கம்பம்: முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டிய தேனி மாவட்ட அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தும், மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் அக்னிசட்டி எடுத்தும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, கம்பத்தில் மாவட்ட செயலாளர் தங்ததமிழ்செல்வன் அக்னிசட்டி எடுத்தும் ஊர்வலமாக புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்து ஏராளமான பெண்கள் பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் எஸ்.கே.எம்.மணி, முன்னாள் தொகுதி செயலாளர் நாகராசன், ஒன்றிய செயலாளர் இளையநம்பி, முன்னாள் தொகுதி இணை செயலாளர் ஜெகநாதன், ஜெ., பேரவை வீரபாண்டியன், பேரவை செயலாளர் ஸ்டார்ரபீக், நகர்மன்ற உறுப்பினர் எலுமிச்சை முருகன், நகர் செயலாளர் பாலு உள்ளிட்ட பலர் அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர்.

பின்னர் கவுமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ.,க்கள் கதிர்காமு, ஜக்கையன், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், கம்பம் ஒன்றிய தலைவர் தங்கமுருகன் உள்ளிட்ட நகர, ஒன்றிய செயலாளர்கள் பங்கேற்றனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !