முதல்வர் நலம் பெற 7,008 பால்குட ஊர்வலம்
ADDED :3379 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, 7008 பால்குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட, அ.தி.மு.க, சார்பில், முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, துவாரகாபுரி மாரியம்மன் கோவிலில் இருந்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை கூட்ரோடு வழியாக, அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு, 7008 பால்குட ஊர்வலம் சென்றது. இதையடுத்து, மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.