பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை ஹோம பூஜை
ADDED :3316 days ago
ஈரோடு: வில்லரசம்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில், நாளை (20ம் தேதி) ஹோம பூஜை நடக்கிறது. ஈரோடு, வில்லரசம்பட்டியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நாளை (20ம் தேதி) காலை, ருத்ர விதாய அகோரஸ்தர மூல மந்திர ஹோமம், பகவத் சேவை நடக்கிறது. மறுநாள் (21ம் தேதி) அபீஷ்டவரத கணபதி ஹோமம், வேத பாராயணம், அதர்வண பத்ரகாளி மஹா மந்திர் ஸம்புடித வீரசரபேஸ்வரர் ஹோமம், கோ பூஜை உள்ளிட்டவை நடக்கிறது. சிருங்கேரி மடத்தின் முத்ராதிகாரி பத்மநாபன் தலைமை வகிக்கிறார். அதர்வண பத்ரகாளி பீடாதிபதி சாம்பவ ரிஷீஸ்வரர் மற்றும் சிருங்கேரி வேத பண்டிதர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.