உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவ பெருமாள் இன்று திருவள்ளூர் திரும்புகிறார்

வீரராகவ பெருமாள் இன்று திருவள்ளூர் திரும்புகிறார்

திருவள்ளூர்: ஸ்ரீபெரும்புதுாருக்கு எழுந்தருளிய வீரராகவ பெருமாள், இன்று காலை புறப்பட்டு, மதியம் திருவள்ளூருக்கு, வருகை தர உள்ளார். ஸ்ரீபெரும்புதுாரில் கோவில் கொண்டுள்ள வேதாந்த தேசிகனின், 748வது அவதார சாற்று மறைக்காக, வீரராகவ பெருமாள் தாமே எழுந்தருளுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சாற்றுமறை திருவிழாவை முன்னிட்டு, வீரராகவ பெருமாள், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, மணவாள நகர், சத்திரம், செங்காடு, மண்ணுார், தொடுகாடு வழியாக, நேற்று காலை, ஸ்ரீபெரும்புதுாரில் எழுந்தருளினார். அவருக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அதன்பின், நேற்றிரவு, பெரிய மாட வீதிகளில் புறப்பாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும், இன்று அதிகாலை, வீரராகவ பெருமாள் புறப்பட்டு, பிற்பகல், 1:00 மணியளவில், திருவள்ளூர் கோவிலை வந்தடைவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !