உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

காரைக்குடி: காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.  காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 14ம் த÷தி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

17ம் தேதி சிவாச்சாரியார்களை அழைத்து வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து முதற்கால யாக பூஜைகள் நடந்தன. காலை 6.30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 8.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை, 9.15 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. காலை 10.15 மணிக்கு பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் விமானம் , ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம், மூலவர் மகா கும்பாபிஷேகம்,  பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மாலை 5.30 மணிக்கு மகாபிஷேகம், இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !