மும்மதத்தினரும் கொண்டாடிய தேனூர் கோயில் திருவிழா
ADDED :3315 days ago
தேனுார், மதுரை தேனுாரில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மும்மதத்தினரும் கொண்டாடிய சுந்தரவல்லியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடந்தது. இக்கோயிலில் அக்.,12ல் கொடியேற்றத்துடன் புரட்டாசி பொங்கல் திருவிழா துவங்கியது. பக்தர்கள் பாலாபிஷேகம் செய்தனர். சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியில் எழுந்தருளினார். பக்தர்கள் சகதியை உடலில் பூசி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பள்ளிவாசலுக்கருகே வந்த அம்மனை வரவேற்ற முஸ்லிம்கள் சர்க்கரை பாத்திகா தந்து சிறப்பு தொழுகை செய்தனர். சர்ச் பகுதியில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை தக்கார் லதா செய்திருந்தார்.