புற்று மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் கிராமத்தில் புற்று மாரியம்மன் தேனியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள் கடந்த 17ம் தேதி காலை 9:00 மணிக்கு துவங்கியது. 18ம் தேதி காலை 10:30 மணிக்கு சுவாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நேற்று (19ம் தேதி) காலை 6:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு புற்று மாரியம்மன், மன்மதன் கோவிலில் இருந்து கடங்கள் புறப்பாடாகி 10:30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தில் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.