செம்பொற்சோதிநாதர் திருக்கோயிலில் கருவில் திரு-வளைகாப்பு விழா!
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி வட்டம், நீலமங்கலம், சென்னை சாலையில் திருநாவுக்கரசர் திருமடம் அருள்மிகு செம்பொற்சோதிநாதர் திருக்கோயிலின் கோயில் பசு அருள்தரு. நந்தினி அம்மைக்கு கருவில் திரு-வளைகாப்பு விழா 30.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்குமேல் 9.00 மணிக்குள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்:
30.10.2016 (ஞாயிற்றுக்கிழமை)
அதிகாலை: 4.00 மணி: திருப்பள்ளி எழுச்சி
5.00 மணி: அருள்தரு. நந்தினி அம்மை திருமஞ்சனம் (கோபூசை)
5.30 மணி: சிவதருமக்கொடி உயர்த்துதல்
காலை: 6.00 மணி: திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, ஆனைந்து வழிபாடு, மூத்தபிள்ளையார் வழிபாடு
காலை: 6.30 மணி: அம்மையப்பர் திருக்குடங்களில் எழுந்தருளல்
காலை: 6.45 மணி: வேதம் நான்கினும் மெய்ப்பொருளாம் நாதனுக்கு வேள்வி வழிபாடு
காலை: 8.15 மணி: நிறையவியளித்தல் திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு
காலை: 8.45 மணி: அருள்தரு நந்தினி அம்மைக்கு கருவில்திரு- காப்பு அணிவித்தல்
காலை: 8.55 மணி: வாழ்த்தி வணங்கி அருள் பெறுதல் அன்னப்பிரசாதம்-அருட்பிரசாதம்
குறிப்பு: கோயிலில் தினமும் காலை 5.00 மணிக்கு கோபூஜை நடைபெறுகிறது. திருமடத்தில் தினமும் 500 பேருக்குக் கூழ் வழங்கப்படுகிறது.
தொடர்புக்கு: 94865 17895.