கருமாரப்பட்டி சுவாமிக்கு குரு பூஜை ஆராதனை விழா
ADDED :3293 days ago
அவலுார்பேட்டை: கருமாரப்பட்டி சுவாமிக்கு குரு பூஜை ஆராதனை மகோற்சவம் நடந்தது. அவலுார்பேட்டையை அடுத்த கருமாரப்பட்டி கிராமத்தில் வெள்ளையானந்த சுவாமி ஜீவ சமாதி அடைந்து, சிவலிங்க வடிவமாக அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு 4ம் ஆண்டு குருபூஜை ஆராதனை மகோற்சவம், நடந்தது. இதை முன்னிட்டு ௨௨ம் தேதி காலை 9:00 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு கோ பூஜை, பாராயணம், சன்மார்க்க கொடிஏற்றுதலும், பின்னர் கணபதி ேஹாமம், நவகிரக ேஹாமம், அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாரதனை நடந்தது. மாலையில் ஆன்மிக சொற்பொழிவும், இரவு சுவாமி வீதிஉலாவும் நடந்தது.