குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் தைலகாப்பு அலங்காரம்
ADDED :3308 days ago
குருவித்துறை: சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் மூலவர்களான பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியர் 7 அடி உயரத்தில் ஒரே சந்தனமரத்திலான வடிவத்தில் எழுந்தருளி உள்ளனர். மூலவர் சுவாமிக்கு ஐப்பசி மாதம் தீபாவளி முதல் நாளுக்கு முன்பு தைலகாப்பு அபிஷேகம் நடக்கும். இந்த தைலத்தை நெற்றியில் தேய்த்தால் நோய்கள் குணமாகும் என்பது மக்களின் நம்பிக்கை. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் செய்துள்ளார்.