பழநி வின்ச்-சில் பக்தர்கள் காத்திருப்பு
ADDED :3302 days ago
பழநி; தீபாவளி விடுமுறை எதிரொலியாக பழநிகோயிலில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மலைக்கு வின்ச்-சில் செல்ல இரண்டு மணிநேரம் காத்திருந்தனர்.தீபாவளியை முன்னிட்டு நேற்று பழநி மலைக்கோயிலில் ஞானதண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ரோப்கார் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதால் வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்கு பொதுதரிசன வழியில் ஒரு மணிநேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.