உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் அலை மோதிய பக்தர் கூட்டம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் அலை மோதிய பக்தர் கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபாவளி விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தீபாவளி விடுமுறையால், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். நேற்றும், நேற்று முன்தினம் என, இரண்டு நாள் தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால், உள்ளூர் பக்தர்கள் அல்லாமல், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில், இரண்டு மணி நேரம் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை குடும்பத்துடன் தரிசனம் செய்து, நவக்கிரக சன்னதியில் நெய் தீபமேற்றி வழிபட்டு சென்றனர். இதனால் மாட வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !