அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தில் மீதியை கோவிலில் விட்டு வருவது சரிதானா?
ADDED :3661 days ago
கோவிலில் தரப்படும் விபூதி, குங்குமத்தை இட்டுக்கொண்டது போக மீதியை வீட்டிற்கு எடுத்துச்சென்று எல்லோருக்கும் கொடுப்பது தான் முறை. கோவிலிலேயே விட்டு வருவது தவறு. பெரும்பாலும் கோவிலின் துõய்மையை பாதிக்கும் விதமாக துõண்களிலும் சுவர்களிலும் போடுவது பெரிய பாவம். இதைத் தவிர்ப்பதற்காக அனேக கோவில்களில் கிண்ணங்கள் வைத்துள்ளனர். அதையும் பயன்படுத்தாமல் துõண்களில் கொட்டினால், அதை வடித்த சிற்பியின் ஆத்மா என்ன பாடுபடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சில கோவில்களில் பேப்பர் கொடுத்து அதில் மடித்து எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்துகிறார்கள். இதை சிலர் தொண்டாகவும் செய்கிறார்கள். கோவில் துõண்களிலும், கண்ட இடங்களிலும் திருநீறு, குங்குமத்தைக் கொட்டி கடவுளின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது.