சோழவந்தான் கோயிலில் கந்தசஷ்டி விழா
சோழவந்தான் : சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன், திருமூலநாதர்சுவாமி கோயிலில் அமைந்த சுப்பிரமணிய சுவாமிகோயில் கந்தசஷ்டி விழாவில் நவ.5 ல் சூரசம்ஹாரம் நடக்கிறது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளிதெய்வசேனா சமேத சுப்பிரமணியசுவாமி சன்னதியில் நேற்று ஐப்பசி கந்தசஷ்டி உற்சவத்தை முன்னிட்டு அம்மன்,சுவாமிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியில் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ.4 ல் மாலை 6:00 மணிக்கு திருவிளக்குபூஜை நடக்கிறது. நவ.5 சனிக்கிழமை மாலை 3:00 மணிக்கு அன்னையிடம் வேல்வாங்குதல், மாலை 6:00 மணிக்குள் சூரசம்ஹாரம் நடக்கிறது. நவ.6ல் காலை சுவாமியின் அன்னபாவாடை தரிசனம், மாலை 7:00 மணிக்குள் தேவியருடன் சுவாமியின் திருக்கல்யாணம் வைபோகம், பின்னர் இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதிஉலா நடக்கிறது. ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர், கோயில் நிர்வாகம் செய்துள்ளது.