ஆறுபடை வீடு முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா
சென்னை: பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில், மகா கந்த சஷ்டி திருவிழா நடக்கிறது. ஆறுபடை வீடுகளும், ஓரிடத்தில் அமைந்துள்ள இக்கோவிலில், அக்., ௩௧ல் துவங்கி, நவ., 6 வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது. அனைத்து சன்னிதிகளிலும், தினமும் காலை, 7.30 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், நவ., 6 வரை, காலை, 10.00 மணிக்கு சண்முகார்ச்சனையும், இரவு, 7.30 மணிக்கு சுவாமி திருக்கோவில் உலாவும் நடக்கிறது. கந்த சஷ்டி நாளான, 5ம் தேதி காலை, 9.00 மணிக்கு வேல் மாறல் பாராயணமும், மாலை, 4.00 மணிக்கு சூரசம்ஹாரமும், இரவு 7.30 மணிக்கு முருகப் பெருமான், வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலாவும் நடக்கிறது. 6ம் தேதி ஞாயிறன்று, மாலை 6.00 மணிக்கு, தேவசேனா திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நவ., 1மாலை, 5.30 மணிக்கு ஹம்சத்வனி குழுவினரின் இன்னிசையும், நவ., 6மாலை, 4.00 மணிக்கு செல்வி ஜே.பி.கீர்த்தனாவின் முருகன் பாமாலையும் நடக்கிறது.