திண்டல், கோபியில் கந்தசஷ்டி: திரளான பக்தர்கள் குவிந்தனர்
ADDED :3301 days ago
ஈரோடு: திண்டல், கோபியில் நடந்த கந்தசஷ்டி விழாவில், திரளான பக்தர்கள் நேற்று கலந்து கொண்டனர். ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மற்றும் யாக பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதில் ஈரோடு, பெருந்துறை, நசியனூர், வெள்ளோடு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* இதேபோல் கோபி பச்சமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவ திருவிழா நேற்று முதல் துவங்கியது. இதையொட்டி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கவச அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார்.