உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவிலில் 13ம் தேதி கும்பாபிஷேகம்

வரசித்தி விநாயகர் கோவிலில் 13ம் தேதி கும்பாபிஷேகம்

கடலுார்: கடலுார் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்கிறது. கடலுார் ஆனைக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு வரும் 12ம் தேதி காலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, மகா கணபதி ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், தன பூஜை, நவக்கிரக ேஹாமம், மகா பூர்ணாகுதி, மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால யாக வேள்வி நடக்கிறது. மறுநாள் 13ம் தேதி காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, கோ பூஜை, நாடி சந்தானம், 9:30 மணிக்கு கடம் புறப்பாடு, 9:50 மணிக்கு விமான கலச கும்பாபிஷேகம், 10:10 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !