உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சி.என்.பாளையத்தில் நிகும்பலா யாகம்

சி.என்.பாளையத்தில் நிகும்பலா யாகம்

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பிரத்தியங்கராதேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. கடலுார் அடுத்த சி.என்.பாளையம் நரியன் ஓடையின் கரையில் அமைந்துள்ள பிரத்தியங்கராதேவி கோவிலில் நேற்று முன்தினம் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு ேஹாம குண்டங்கள் பிரவேசம் நடந்தது. பகல் 12:30 மணிக்கு நிகும்பலாயாகம் எனப்படும் மிளகாய் வற்றல் யாகத்தில் செலுத்தப்பட்டு 1:00 மணிக்கு மகாபூர்ணாஹீதி நடந்தது. தொடர்ந்து கலச அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !