உலக நன்மைக்காக அகல் விளக்கு வழிபாடு
ADDED :3299 days ago
ஈரோடு: உலக நன்மைக்காக, 1,008 அகல் விளக்குகள் ஏற்றி, ஈரோட்டில் வழிபாடு நடந்தது. கார்த்திகை தாமோதர முதல் சோம வாரத்தை முன்னிட்டும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள, ராத்திரி சத்திரம் கல்யாண ஆஞ்சநேயர் கோவிலில், வழிபாடு நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி கோவில் மூலவராக உள்ள லட்சுமி நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் சந்தானகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். அடுத்து வரும் ஐந்து திங்கள் கிழமைகளிலும், அகல் விளக்கு வழிபாடு நடக்கும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.