புதுப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :3299 days ago
கம்பம்: கம்பம் அருகே அனுமந்தன்பட்டி மற்றும் புதுப்பட்டி கிராமங்கள் இணைந்து இங்குள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடுகின்றன. 15 நாட்கள் திருவிழாவில் ஒரு வாரம் அனுமந்தன்பட்டியிலும், ஒரு வாரம் புதுப்பட்டியிலும் விழா நடைபெறும். கடந்த சில நாட்களாக புதுப்பட்டியில் திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் ஒவ்வொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மண்டகப்படி நடத்துவார்கள். அம்மன் விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார். நேற்று அம்மன் சர்வ அலங்காரத்தில் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தார். இளைஞர் மன்றம் சார்பில் வண்டிவேஷம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்தல், ஆயிரம் கண்பானை, உருண்டு கொடுத்தல், அக்னிசட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.