திருமலையில் 5 லட்சம் பேர் தரிசனம்
ADDED :5125 days ago
நகரி: திருமலையில் நேற்று அதிகாலை முதல் கருட சேவையைக் காண பக்தர்கள் குவிந்தனர். காலை 9 முதல் 11 மணி வரை மலையப்ப சுவாமி மாடவீதியில் மோகினி அவதாரத்தில் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலில் நேற்று அதிகாலை சுப்ரபாத சேவைக்குப் பின், நள்ளிரவு வரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தொலைதூர தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஒரே நாளில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் இலவச உணவு சாப்பிட வசதி செய்யப்பட்டிருந்தது. பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளில் காலை 9 முதல் 11 வரை மலையப்ப சுவாமி அனுமந்த வாகன சேவையில் உற்சவராக மாடவீதியில் எழுந்தருளுகிறார்.