உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கை கோவில்களில் சிறப்பு பூஜை

துர்க்கை கோவில்களில் சிறப்பு பூஜை

ஊத்துக்கோட்டை: துர்க்கை அம்மன் கோவில்களில் நடந்த ராகு கால பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் உள்ளது, துர்க்கை அம்மன் சன்னிதி. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், மாலை, 3:00 முதல், 4:30 மணி வரை, சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று, செவ்வாய்க்கிழமை என்பதால், சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ’108’ குங்கும அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல், ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தாராட்சி லோகாம்பிகை உடனுறை பரதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான துர்க்கை அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !