150 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய அகல் விளக்கு!
ADDED :3298 days ago
கோரக்பூர்: உ.பி.,யில் தயாரிக்கப்பட்ட, 150 கிலோ எடையுள்ள, உலகின் மிகப்பெரிய அகல் விளக்கு, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. உ.பி.,யில், சிராவஸ்டி மாவட்டத்தில் உள்ள, ஸ்ரீ ஸ்ரீ லட்சுமி பூஜா சமிதியைச் சேர்ந்த இளைஞர்கள், பிரம்மாண்டமான களிமண் அகல் விளக்கை தயாரித்துள்ளனர்; இதன் எடை, 150 கிலோ. இதன் கொள்ளளவு, 101 லிட்டர். ஒன்றரை அடி உயரமும், 4 அடி விட்டமும் உடையது இந்த விளக்கு.