கரூர் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி உற்சவ விழா
ADDED :3297 days ago
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. கந்த சஷ்டி விழா முன்னிட்டு, கரூர் அடுத்த வெண்ணைமலை முருகன் கோவிலில், இன்றும், நாளையும் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது. வரும், 5ல் ஆட்டுக்கிடா வாகனத்தில் சுப்பிரமணியர் எழுந்தருளி வீதியுலா வருகிறார். அதன் பின் மாலை 4:30 மணிக்கு மேல் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடக்கிறது. வரும், 6ல் திருக்கல்யாணம் நடந்து, புஷ்ப விமானத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். மறுநாள், சங்காபிஷேகம் நடக்கிறது. நேற்று பெண்கள் பலர், வெண்ணைய்மலை முருகன் கோவிலுக்குச் சென்று கொடி மரத்துக்கு முன் நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். அதேபோல், கிருஷ்ணராயபுரம் பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில், நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேம் நடந்தது.