திருவாதவூரில் நவராத்திரி விழா
ADDED :5192 days ago
மேலூர் : மேலூர் அருகே திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் நவராத்திரி கலை விழா துவங்கி நடக்கிறது. விழாவின் துவக்க நாளில் ராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். திருமுறை இன்னிசை நடந்தது. இரண்டாம் நாளில் மீனாட்சி அம்மன் அலங்காரமும், மூன்றாம் நாளில் திருஞான சம்பந்தருக்கு ஞான பால் ஊட்டியதும், நான்காம் நாளில் விநாயகர் ஜனனமும், ஐந்தாம் நாளான நேற்று வேதநாயகி அம்மன் அலங்காரமும் நடந்தன. ஆறாம் நாளான இன்று தட்சிணாமூர்த்தி அலங்காரம், நாளை சரஸ்வதி அலங்காரம், எட்டாம் நாள் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரம், இறுதி நாளில் சிவபூஜை நிகழ்ச்சிகள் நடக்கஉள்ளன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் ஜெயராமன், பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்து வருகின்றனர்.