உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில், கடந்த 31ம் தேதி கந்தர் சஷ்டி விழா துவங்கி நடந்து வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு சுப்ரமண்யர் சன்னதியில், விக்னேஷ்வர பூஜை‚ புண்யாகவாசனம்‚ பஞ்சாசன பூஜை‚ சுப்ரமண்யர் ஆவாகணம்‚ ஆவரண பூஜைகள்‚ மகா அபிேஷகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு வள்ளிதேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு சகஸ்ரநாமார்ச்சனையுடன் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அர்ச்சனை‚ விபூதி அலங்காரத்தில் மூலவர் சுப்ரமண்யருக்கு மகா தீபாராதனை நடந்தது. உற்சவ மூர்த்தி வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சூரசம்கார தீபாராதனையும்‚ ஆலய பிரதட்சணமும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக‚ நாளை (5ம் தேதி) இரவு 7:00 மணிக்கு சக்திவேல் வாங்குதல் மற்றும் சூரசம்ஹார வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !