உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பசுமலை தாங்கலில் சிறப்பு ஹோமம்

பசுமலை தாங்கலில் சிறப்பு ஹோமம்

செஞ்சி : பசுமலை தாங்கல் பாண்டுரங்க சாமி கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. செஞ்சி தாலுகா பசுமலை தாங்கல் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத பாண்டுரங்க சாமி கோவிலில், கடந்த செப்.16ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு மறுநாள் முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் கோபூஜையும், ராதா, ருக்மணி சமேத பாண்டுரங்கசாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 7:00 மணிக்கு சுதர்சன ஹோமம் மற்றும் கலசாபிஷேகம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !