உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெசன்ட் நகரில் நவ.,5 சூரசம்ஹாரம்

பெசன்ட் நகரில் நவ.,5 சூரசம்ஹாரம்

சென்னை: பெசன்ட் நகரில் உள்ள, ஆறுபடை வீடு முருகன் கோவிலில், நவ., 5 சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சென்னை, பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனியில், ஆறுபடை வீடுகளில் உள்ள முருகக்கடவுளரை, ஒரே இடத்தில் காணும் வகையில், கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில்களில், அக்., 31 முதல், கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. நவ.,5 சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, நவ.,5 காலை, 7:30 மணிக்கு, முருகருக்கு
விசேஷ அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற உள்ளது. காலை, 9:00 மணிக்கு, வேல் மாறல் பாராயணம் நடைபெறும். மாலை, 4:00 மணி முதல், 5:30 மணி வரை, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். மாலை, 7:30 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில், முருகன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நிறைவு நிகழ்ச்சியாக, நவ.,6 மாலை, 6:00 மணிக்கு, தேவசேனை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !