அலங்காநல்லுார் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3292 days ago
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஐயப்பன் கோயிலில் உலக நன்மை, உலக சமாதானம் வேண்டி சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது. மேலும் குதிரை வாகனத்தில் அமர்ந்த நிலையில் ஹயக்கிரீவர் சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் நிர்வாகி சீனிவாசன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்கம் செய்திருந்தது. அன்னதானம்
வழங்கப்பட்டது.
சிந்துபட்டி: உசிலம்பட்டி தாலுகா தும்மக்குண்டு வைரவ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. சுவாமிக்கு மகா அபிஷேகம், மகாதீபாராதனை வழிபாடு நடந்தது. பூஜைகளை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர் ரமணன் குழுவினர் செய்திருந்தனர். அன்னதானம் நடந்தது.