பாலசுப்ரமணியர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED :3297 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பாலசுப்ரமணிய கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள ராஜ கணபதி கோவிலில் உள்ள வள்ளி தெய்வாணை சமேத பாலசுப்ரமணிய கோவிலில் நான்காம் ஆண்டு திருக்கல்யாணம் மற்றும் கந்த சஷ்டி விழா கடந்த 31ம் தேதி துவங்கியது. இதனையடுத்து, நாள்தோறும் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து வைத்து ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று காலை 11 மணியளவில் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.