உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பு.கொணலவாடியில் சூரசம்ஹாரம்

பு.கொணலவாடியில் சூரசம்ஹாரம்

உளுந்துார்பேட்டை: பு.கொணலவாடி கிராமத்திலுள்ள சுப்ரமணியர் சுவாமி கோவிலில் சூரசம்ஹாரத்தில் கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்திலுள்ள சுப்ரமணியர் சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு காப்பு கட்டினர். மாலை 6 மணிக்கு தீபாரதனை வழிபாட்டுடன் கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்டோர் கம்பம் ஏறி பாரதம் படித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு மணிக்கு வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !