உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சி அம்மன் கோவிலில் பிப்., 1ல் கும்பாபிஷேகம்

காமாட்சி அம்மன் கோவிலில் பிப்., 1ல் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் பிப்., முதல் தேதி நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, காமாட்சி அம்மன் தான். பிரசித்தி பெற்று விளங்கும் இந்த கோவிலில், 1995ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனரமைப்பு மற்றும் பழுது பார்ப்பு பணிகள், 2014ல் துவங்கின. அம்பாள் மூலவர் விமான கோபுரத்தில் தங்க தகடு பொருத்தும் பணி, 20 கோடி ரூபாய் மதிப்பில், 60 கிலோ தங்கத்தால் நடைபெற்று வருகிறது. பிற பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. எனவே, அடுத்த ஆண்டு, பிப்ரவரி 1ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவில் திருப்பணிகள், 80 சதவீதம் முடிந்துள்ளன. பழமை மாறாமல் அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்திற்கு முன், 11 கால பூஜை நடத்த திட்டமிட்டுள்ளோம். தங்கப் பல்லக்கும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் ஸ்ரீசக்கர ரதமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான அனைத்து பணிகளும் முடிந்த பின், பிப்ரவரி 1ல் கும்பாபிஷேகம் நடைபெறும். விஸ்வநாத சாஸ்திரி, காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீகாரியம், காஞ்சிபுரம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !