ஊரார் ஒற்றுமையுடன் வாழ சொல்ல வேண்டிய மந்திரம் இருக்கிறதா?
ADDED :3654 days ago
ஊரார் மாதம் ஒருமுறையாவது ஒரு கோவிலில் ஒன்று கூடி வழிபட்டாலே போதும். ஒற்றுமையுடன் வாழும் மனநிலையை எல்லோருக்கும் கடவுள் தந்து விடுவார். சுவாமி சன்னிதானத்தில் எல்லோரும் ஒன்று கூடினால் பரஸ்பர விரோதங்கள் மறந்து நட்பு மலரும். பூஜை முடிவில் வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க, மன்னன்கோன்முறை அரசு செய்க, குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான்மறை அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க, மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் என்ற பாசுரத்தை ஒருவர் சொல்ல மற்ற எல்லோரும் திரும்பச்சொல்லும் கூட்டு வழிபாட்டையும் நிகழ்த்தினால் யாராலும் பிரிக்க முடியாத ஒற்றுமை ஊராக அவ்வூர் திகழும்.