உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகின் பொக்கிஷம் எது?

உலகின் பொக்கிஷம் எது?

உலகத்திலேயே சிறந்த பொக்கிஷம் எது என்றால், தங்கப்புதையலையோ, வைர வைடூரியங்களையோ நாம் குறிப்பிடுவோம். ஆனால், நபிகள் நாயகம், தம் நண்பர் ஒருவரிடம், “தோழரே! மனிதன் பொக்கிஷமாக கருத வேண்டியதில் மிகச்சிறந்ததை உமக்கு அறிவிக்கட்டுமா?” என்றார். அந்த நண்பர் ஆவலுடன் அவரை நோக்க, “நல்ல பெண் தான் மிகச்சிறந்த பொக்கிஷம். கணவர் அவளைப் பார்த்தால் அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள்,” என்றார். இதன் விளக்கத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். மனைவி எந்நேரமும் சிடுசிடுவென முகத்தை வைத்திருந்தால், அவளைப் பார்க்கும் கணவருக்கு, இவளைப் போய் நிக்காஹ் செய்தோமே, அல்லாஹ் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனையைக் கொடுத்தான்’ என்று நினைக்கத் தோன்றும். அதே நேரம், அவள் கடினமான சூழலிலும் இனிய முகம் காட்டினால், அவர் அவளது பொறுமை கண்டு மகிழ்வார். கணவர் கட்டளை ஏற்றுக் கொள்வதை பெண்ணடிமைத்தனம் என எடுத்துக் கொள்ளக்கூடாது. விட்டுக்கொடுக்கும் போக்கு என்றே கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்வில் நிம்மதிக்கு பஞ்சமிருக்காது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !