உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி 18ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு!

சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி 18ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு!

திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தி வரும் 18ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். அதேபோல், மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கான மேல்சாந்தி தேர்வும் அதே நாளில் நடைபெற உள்ளது.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் பிரசித்திப் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், இவ்வாண்டுக்கான மேல்சாந்தி நியமனத்திற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 47 பேர் பங்கேற்றனர்.அதேபோல், அய்யப்பன் சன்னதி அருகே உள்ள மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கான புதிய மேல்சாந்தி தேர்வுக்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் 33 பேர் பங்கேற்றனர். அவர்களில் தகுதியுடையவர்களாக, அய்யப்பன் கோவிலுக்கு பத்து பேரும், மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கு13 பேரும் தேர்வாயினர். அவர்களில் தலா ஒருவரை வரும் 18ம் தேதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் நடைபெறும். அன்றைய தினம் தேர்வாகும் மேல்சாந்தி சபரிமலையிலேயே தங்கி பூஜைகளை நடத்துவார். இப்பதவி ஓராண்டு காலத்திற்கானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !