பிரதோஷம், மஹா பிரதோஷம் இரண்டும் ஒன்றா?
ADDED :3654 days ago
நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாச பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என ஐந்து வகை பிரதோஷங்கள் உள்ளன. தினமும் மாலை 4:30 – 6:00 மணி வரையிலான காலத்திற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர். வளர்பிறை திரயோதசி திதியன்று மாலை பட்சப் பிரதோஷம். தேய்பிறை திரயோதசியன்று மாலை மாச பிரதோஷம். இந்த மாச பிரதோஷம் சனிக்கிழமையன்று வந்தால், அது மகா பிரதோஷம். மகா பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிவது பிரளய பிரதோஷம். இந்த ஐந்து பிரதோஷங்களில் கடைசியை மட்டும் நாம் இன்னும் பார்க்கவில்லை.