கல்வெட்டில் தீபாவளி!
ADDED :3654 days ago
நம் முன்னோர் தீபாவளி கொண்டாடிய செய்தியும், அந்நாளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது குறித்த தகவல்களும் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. அதேபோல், காளஹஸ்தி கோயிலிலுள்ள கல்வெட்டு தீபாவளித்திருநாளில் இறைவனுக்குச் சிறப்பு மானியங்கள் வழங்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.