காவேரி சங்கராந்தி!
ADDED :3654 days ago
ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் சூரியன் துலாராசியில் பிரவேசிப்பது தலைக்காவேரியில் தீர்த்தோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது பண்டிதர்கள் குறித்து தரும் காவேரி சங்கராந்தி எனப்படும் முகூர்த்த நேரத்தில் பிரம்மகுண்டகை என்ற இடத்தில் காவேரி அன்னை பால் பொங்குவது போல் பொங்கி எழுந்து, கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களைப் பரவசப்படுத்துவாள். இந்த அதிசயம் இன்றுவரை தவறாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.