ஸ்ரீபுரத்தில் ரூ.10 கோடியில் சீனிவாச பெருமாள் கோவில்
ADDED :3292 days ago
வேலுார்: வேலுார் தங்க கோவிலுக்கு அருகே, 10 கோடி ரூபாய் மதிப்பில், சீனிவாச பெருமாள் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதற்கு, டிச., 9ல், கும்பாபிஷேகம் நடக்கிறது.வேலுார் அருகே, ஸ்ரீபுரத்தில் உள்ள, தங்க கோவிலில் உள்ள மகா லஷ்மியை, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். தற்போது இங்கேயே, 10 கோடி ரூபாய் செலவில், சீனிவாச பெருமாளுக்கு தனி கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, 9 அடி உயரத்தில், கிருஷ்ண சிவா சிலா என்னும் கறுப்பு கல்லில், சீனிவாச பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. வரும், டிச., 9 காலை, 9:15 மணி முதல், 10:15 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. சீனிவாச பெருமாளுக்கு தினமும் பூஜை செய்து அலங்கரிக்க, 50 கிலோ தங்கம், வெள்ளியில் ஆபரணம் தயாராகி கொண்டிருக்கிறது. இத்தகவலை, வேலுார் நாராயணி பீடம் சக்தி அம்மா கூறினார்.