உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் திருமூலநாதர்சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான் திருமூலநாதர்சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான்: சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன் திருமூலநாதர்சுவாமி கோயிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.வள்ளி தெய்வசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்தசஷ்டி உற்சவம் 5 நாட்கள் நடந்தது. நவ.,5ல் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.நவ.,6ல் அன்னபாவாடை தரிசனம் நடந்தது. நேற்று திருக்கல்யாணம் நடந்தது. சிவாச்சாரியார்கள் கிருஷ்ணமூர்த்தி, நாகராஜன் சடங்குகளை செய்தனர். ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !