பாலதண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிேஷக விழா
ADDED :3291 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை வேட்டைக்காரன்புதுார் மேற்கு வீதியில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிேஷக விழா நடைபெற்றது. ததேவானந்த சுவாமிகள் குழுவினர் கும்பாபிேஷகத்தை நடத்தினர். விழாவில் பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டு, கோவிலில் உள்ள விநாயகர், பாலதண்டாயுதபாணி, தட்சிணாமூர்த்தி, லிங்கேஸ்வரர், துர்க்கையம்மன், நவக்கிரகங்களுக்கு கும்பாபிேஷகம் செய்யப்பட்டது. அத்துடன், தசதரிசனம், கஜ பூஜை, அஸ்வத் பூஜை, கோமாதா பூஜைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்வில், அன்னதானமும் அளிக்கப்பட்டது.