உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா

செந்துறை: செந்துறை அருகே மணக்காட்டூரில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இங்கு ஊர் பொதுமக்கள் சார்பில் புதிதாக ஐயப்பன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கணபதி ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனையுடன் விழா துவங்கியது. மாலையில் வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனம், ரத்ன பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று துவாரபூஜை, வேதிகார்ச்சனை, வேதபாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதை தொடர்ந்து கடம் புறப்பாடு, விமான கும்பாபிஷேகம் நடந்தது. பகலில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !