உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரிப்பையூர் கோவில்களை அகழாய்வு செய்யுங்க! : தொல்லியல் பாதுகாப்பு மையம் வலியுறுத்தல்

நரிப்பையூர் கோவில்களை அகழாய்வு செய்யுங்க! : தொல்லியல் பாதுகாப்பு மையம் வலியுறுத்தல்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூரில் புதைந்த நிலையில் காணப்படும், இரண்டு சிவன் கோவில்களை, அகழாய்வு செய்ய வேண்டும்; பாண்டியர் கால வாணிபம், ஆட்சி முறை குறித்த பல சான்று கள் கிடைக்கும் என, தொல்லியல் வரலாற்று பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் - துாத்துக் குடி கிழக்கு கடற்கரை சாலையில், சாயல்குடிக்கு அருகேயுள்ள தெற்கு நரிப்பையூர் மற்றும் வெட்டுக்காடு பகுதிகளில், புதைந்த நிலையில், சிவன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களை ஆய்வு செய்த, ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய தலைவர் வே.இராஜ குரு, செயலர் காளிமுத்து ஆகியோர் கூறியதாவது: தெற்கு நரிப்பையூர் கடற்கரையில், பெயர்க்காரணம் கிடைக்காத, சொக்கன்பாடு பகுதி யில், சொக்கநாதர் கோவில் இருக்கலாம் என்ற யூகத்தில், ஆய்வு செய்தோம். அங்குள்ள தென்னந்தோப்பின் மேட்டு பகுதியில், ஒரு கொடுங்கையும், சில துாண்களும், புதைந்த நிலையில் இருந்தன. அப்பகுதியில், 60 ஆண்டுகளுக்கு முன், புதைந்த நிலையில் கோவில், கல் தொட்டி, துணி துவைக்கும் கல் உள்ளிட்டவை இருந்ததாக ஊர் மக்கள் கூறினர். அவ்வூர், வடமொழியில், சம்பு மாநகர் என, அழைக்கப்பட்டு உள்ளதால், இங்கு, பிராமணர்கள் வாழ்ந்ததையும், கோவில் இருந்ததையும் அறிய முடிகிறது.

13ம் நுாற்றாண்டு : நரிப்பையூருக்கு அருகே, குதிரைமொழி என்ற இடத்தில், எட்டு கைகளுடன், வடக்கு நோக்கி அமர்ந்த நிலை யில், காளி சிலை உள்ளது. இதை, உலகம்மன் என, ஊரார் வணங்குகின்றனர். கி.பி., 13ம் நுாற்றாண்டு எழுத்தமைதியில், சேதமடைந்த சில கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. நரிப்பையூர் - கன்னிராஜபுரத்துக்கு இடையே உள்ள, வெட்டுக்காடு சாலையின் இடது புறத்தில், உடை மரத்தின் கீழ் ஒரு நந்தி உள்ளது. அப்பகுதியில், 2007ல், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட குழி தோண்டியபோது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த அம்மன், பைரவர் சிலைகளும், 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முருகன் சிலையும் கிடைத்தன.தற்போதுள்ள நந்தியும், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருப்பதால், அங்கு, சிவன் கோவில் இருந்தது உறுதியாகிறது. அதன், 100 மீ., துாரத்தில், வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில், எட்டு கைகளுடன், கருங்கல் காளி சிலை உள்ளது. இதை, பிழை பொறுத்தம்மா என, மக்கள் வணங்குகின்றனர். அதன் அருகில், கிணறு தோண்டியபோது, ஆறு அடி ஆழத்தில், 13ம் நுாற்றாண்டு வடிவமைப்பில், இரு சுடுமண் சிற்பங்கள் கிடைத்தன. குதிரைமொழியில் உள்ள உலகம்மனை, அக்கா என்றும், வெட்டுக்காடு பகுதியில் உள்ள பிழைபொறுத்தம்மனை, தங்கை என்றும் மக்கள் அழைக்கின்றனர். இப்பெயர்கள், அவற்றுக்கான கால தொடர்பை உணர்த்து கின்றன.தெளிவு கிடைக்கும். இக்கோவில்கள், ராமேஸ்வரம் - கன்னியா குமரி கடலோர வணிகப்பாதையில் உள்ளதால், அங்கு, வணிகர்கள் தங்கி இருந்திருக்கலாம். அவர்கள், சைவம் உள்ளிட்ட சமயங்களை வளர்த்திருக்கலாம். இக்கோவில்களை அகழாய்வு செய்தால், பாண்டியர் கால வணிகம், ஆட்சி முறை, சமய வளர்ச்சிஉள்ளிட்டவற்றில் தெளிவு கிடைக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !