ஜெனகைமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி அம்மனுக்கு கூழ்
ADDED :3262 days ago
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில் ஐப்பசி செவ்வாய் உற்சவத்தில் மழைவேண்டி அம்மனுக்கு பெண்கள் கூழ் நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயிலில் நேற்று பெண்கள் அங்கபிரதட்சனம், நெய்விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கூழ் காய்ச்சி காணிக்கை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜாரி கணேசன் பிரசாதம் வழங்கினார். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி லதா, தலைமை கணக்கர் பூபதி செய்திருந்தனர்.