சங்கவிநாயகர் கோயிலில் கந்த சஷ்டி விழா
ADDED :3259 days ago
மதுரை, மதுரை வில்லாபுரம் ஆன்மிக சேவா சங்கம் சார்பில் கந்த சஷ்டி விழா சங்கவிநாயகர் கோயிலில் நடந்தது. ஞானசக்திவேலுக்கு பல்வகை அபிஷேகம் நடந்தது. ஆறுபடை வீடு அலங்காரமும், நிறைவுநாளில் முருகன், தெய்வானை திருமண காட்சியும் நடந்தது. பூஜையை அலங்கார பட்டர் செய்திருந்தார். ஏற்பாடுகளை தலைவர் நல்லதம்பி, துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மனோகரன் செய்திருந்தனர். தனபாலன் நன்றி கூறினார்.